ஜன.17 தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோருவது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் அமித்ஷாவை சந்திக்க திட்டம்

டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருவது தொடர்பாக பேச, டி. ஆர். பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் அமித்ஷாவை சந்திக்க உள்ளனர். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக சட்டசபையில் இயக்கப்பட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு காத்திருப்பில் இருக்கின்றது. இச்சூழ்நிலையில் இந்த மசோதாவை ஆளுநர் தற்போது வரை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

எனவே, இது தொடர்பாக, ஆளுநரின் இந்த காலதாமதம் குறித்தும், விரைவாக இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அறிவுறுத்த கோரியும் டி. ஆர். பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்றனர். ஆனால் 2 முறையும் அவரை சந்திக்க முயன்றும் பல்வேறு காரணங்களால் சந்திப்பு என்பது ஏற்படாமல் போனது.

உத்திரப்பிரதேசத்தில் நடைபெறக்கூடிய தேர்தல், ஒமிக்ரான் தொற்று உள்ளிட்ட காரணங்களால் சந்திப்பு என்பது தள்ளி போய் கொண்டே இருந்த நிலையில், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த டி. ஆர். பாலு அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை கூறியிருந்தார். இச்சூழ்நிலையில்  தமிழக எம்.பி.க்களை சந்திப்பதற்கு உள்துறை அமைச்சர் தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 17 ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் டி. ஆர். பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து நீட்விலக்கு மசோதா தொடர்பான கோரிக்கைகளை அளிக்கவுள்ளனர். 

Related Stories: