×

ஒமிக்ரான் வைரஸுக்கான தடுப்பூசி மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும்: ஃபைசர் நிறுவனம் தகவல்

டெல்லி: ஒமிக்ரான் வைரஸுக்கான தடுப்பூசி மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா ஒமிக்ரான் வைரஸ் பெறும் அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது. டெல்டா வகை வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் உள்ளன. தற்போது கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுமா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. இந்நிலையில், ஒமிக்ரான் தடுப்பூசி  மார்ச்சில் தயாராகும் என ஃபைசர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், ஒமிக்ரானுக்கான கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும் என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பௌர்லா தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தடுப்பூசி ஒமிக்ரானால் ஏற்படும் தீவிர பாதிப்புகளை குறைப்பதாக குறிப்பிட்ட அவர், நேரடியாக ஒமிக்ரானுக்காக தயாரிக்கப்படும் தடுப்பூசி, மிதமான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாத தொற்றில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

Tags : Pfizer , Omigron, Vaccine, March, Pfizer Company
× RELATED 12 -15 வயது சிறார்களுக்கு கொரோனா...