‘கோல் அடிக்க வேண்டியது தான்’ அமரீந்தர் சிங்கின் புதிய கட்சிக்கு ஹாக்கி மட்டை-பந்து சின்னம்

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சிக்கு ஹாக்கி மட்டை, பந்து சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அடுத்த மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து மோதலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கட்சியில் இருந்து விலகினார்.

இதையடுத்து, பாஜ தலைவர்களை சந்தித்த அவர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை நிறுவினார். கட்சிக்கு சின்னம் ஒதுக்க கோரி அமரீந்தர் சிங் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், அவரது கட்சிக்கு ஹாக்கி மட்டை, பந்து சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமரீந்தர் தனது டிவிட்டரில், ``பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சிக்கு ஹாக்கி மட்டை, பந்து சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. கோல் அடிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி,’’ எனக் கூறியுள்ளார்.

Related Stories: