என்ஐஏ விசாரணை கோரி புதிய வழக்கு

பிரதமர் பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கல் பருண் குமார் சின்கா தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு அதிகாரிகள் சட்டத்தை மீறுவது கண்டறியப்பட்டால் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். எனவே, பிரதமர் பாதுகாப்பு குளறுபடி விவகாரம் குறித்து என்ஐஏ போன்ற சிறப்பு விசாரணை அமைப்புகளோ அல்லது நீதிமன்றம் பொருத்தமானது என கருதும் வேறு பிற விசாரணை அமைப்புகள் மூலமோ முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறி உள்ளார்.

சர்வதேச எண்களில் இருந்து மிரட்டல்: பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நேரத்தில் 50க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுக்கு பல்வேறு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டிற்கு நாங்கள் தான் காரணம் என சீக் பார் ஜஸ்டீஸ்(Sikhs for justice) என்ற அமைப்பினர் பொறுப்பு ஏற்பதாக பேசியுள்ளனர். மேலும் இந்திய உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க கூடாது எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: