×

விஸ்வநாதர் கோயில் வளாக ஊழியர்களுக்கு சணலால் தயாரிக்கப்பட்ட 100 ஜோடி காலணிகள்: பிரதமர் மோடி அனுப்பினார்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை ஆற்றில் இருந்து நேரடியாக வரும் வகையில் காசி விஸ்வநாதர் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் கோயில் வளாகத்தில் ரப்பர் மற்றும் தோலால் ஆன காலணிகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வளாகத்தில் வேலை செய்பவர்கள் காலணிகள் இன்றி வெறும் காலுடனே இருக்கின்றனர். மதகுருக்கள், சேவை செய்பவர்கள், பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவருமே காலணிகள் இன்றி வேலை செய்து வருகின்றனர். இதனை அறிந்த பிரதமர் மோடி சணலால் செய்யப்பட்ட 100 ஜோடி காலணிகளை காசி விஸ்வநாதர் வளாகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Tags : Viswanathar ,Modi , 100 pairs of shoes made of hemp for the staff of Viswanathar temple complex: Prime Minister Modi sent
× RELATED பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி..!!