×

வேட்புமனு தாக்கலில் விவரங்கள் மறைப்பு: ஓபிஎஸ், தேனி எம்பி மீதான வழக்கு ஆவணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

தேனி: வேட்புமனு தாக்கலில் விவரங்களை மறைத்ததாக ஓபிஎஸ், அவரது மகனான தேனி தொகுதி எம்பி ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்குப்பதிவு ஆவணங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கலில் விபரங்களை மறைத்துள்ளது குறித்து வழக்குபதிவு செய்ய, தேனி மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மிலானி மனுவின் அடிப்படையில் தேனி ஜூடிசியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதன்படி நேற்று முன்தினம் ஓபிஎஸ் மற்றும் தேனி எம்பி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125-ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று காலை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, நீதிபதி பன்னீர்செல்வத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்தார். இதுதொடர்பாக விசாரணை இறுதி அறிக்கையை பிப். 7க்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அப்போது, ஓபிஎஸ் தரப்பில் அவரது மைத்துனரான வக்கீல் சந்திரசேகர் ஒரு மனு அளித்தார். அதில், ஓபிஎஸ், ரவீந்திரநாத் ஆகியோர் வேட்புமனு தாக்கலின்போது, விவரங்களை மறைத்ததாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். இதன் நகலை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : OBS ,Honey ,MB , Covering up details in nomination: Case filed against OBS, Theni MP
× RELATED காராமணி பழப்பச்சடி