குலசேகரம் அருகே வெடிகுண்டு வீச்சு

குலசேகரம்: குலசேகரத்தை அடுத்துள்ள அண்டூர் பகுதியில் என்எஸ்எஸ்(நாயர் சர்வீஸ் சொசைட்டி) கரையோக அலுவலகம் உள்ளது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவரான டாக்டர் கிருஷ்ணபிரசாத், செயலாளர் ராஜூ, பொருளாளர் ரவி ஆகியோர் ேநற்று முன்தினம் இரவில் அந்த அலுவலகத்தில் இருந்து வரவு செலவு கணக்குகளை சரிபார்த்து கொண்டு இருந்தனர்.

இரவு 8 மணியளவில் திடீரென அலுவலகத்தின் முன்பக்க நுழைவு கேட்டில் பயங்கர வெடிசத்தம் கேட்டது. உடனடியாக என்எஸ்எஸ் நிர்வாகிகள் வெளியே வந்து பார்த்த போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பைக்கில் அமர்ந்து இருந்தார். மற்றொருவர் இவர்களை கண்டவுடன் அந்த பைக்கில் ஏறி மின்னல்  வேகத்தில்  தப்பி சென்றார்.  சத்தம் வந்த இடத்தில் பார்த்த போது நாட்டு வெடி குண்டு வீசியதற்கான  அடையாளங்கள் இருந்தன. வெடிகுண்டு சிதறல்கள் அப்பகுதியில் கிடந்தன. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாகவும் இருந்தது. இது குறித்து என்எஸ்எஸ் கரையோக நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமாேனார் நேற்று இரவு குலசேகரம் காவல் நிலையத்தில் திரண்டு வந்து புகார் செய்தனர்.

Related Stories: