பொன்னேரி, திருநின்றவூர் நகராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவள்ளூர்: பொன்னேரி, திருநின்றவூர் நகராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை, கலெக்டா் ஆல்பிஜான் வர்கீஸ் வெளியிட்டார். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளுர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பொன்னேரி மற்றும் திருநின்றவூர் ஆகிய நகராட்சிகளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.

Related Stories: