புக்கத்துறை ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு: திருப்போரூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியம் புக்கத்துறை ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா அப்பகுதியில் உள்ள இ - சேவை மைய கட்டிடத்தில் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சொரூபராணி எழிலரசு தலைமை தாங்கினார், துணைத் தலைவர் சித்ரா வெங்கடேசன் முன்னிலை வகித்தார்,  ஊராட்சி செயலர் சுந்தர் வரவேற்றார். திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி கலந்துகொண்டு, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ கலைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் ஆதவன், தமிழரசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாமண்டூர் பகுதியில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றி,  தொழிலாளர் விடுதலை முன்னணி சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் அக்கட்சியினர் மற்றும் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: