அமெரிக்காவில் விநோத சம்பவம்: விமானம் மீது மோதிய ரயில்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் குட்டி விமானம் ஒன்றின் மீது பயணிகள் ரயில் மோதி சுக்கு நூறாக சிதறடித்த விநோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்சின் பகோய்மா பகுதியில் குட்டி விமானத்தில் பைலட் ஒருவர் நேற்று பறந்துள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரம் கோளாறு காரணமாக அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. பைலட் தலையில் காயங்களுடன் விமானத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து பைலட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் பயணிகள் ரயில் படுவேகமாக தண்டவாளத்தில் வந்தது. ரயில் வருவதை பார்த்த போலீஸ் அதிகாரிகள், அவசர அவசரமாக பைலட்டை விமானத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து இழுத்துச் சென்றனர். பைலட் வெளியே வந்த சில நொடிகளில் வேகமாக வந்த ரயில், விமானம் மீது மோதி சுக்கு நூாறாக்கியது. நூலிழையில் பைலட்டின் உயிரை போலீசார் காப்பாற்றிய இந்த வீடியோ காட்சிகள் டிவிட்டரில் வைரலாகின. இந்த விபத்தில் ரயிலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பைலட் சீரான உடல் நிலையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: