×

யாழ்ப்பாணம்-கொழும்பு இடையே சொகுசு ரயில் சேவை தொடக்கம்: இந்தியா கடன் உதவி

கொழும்பு: இந்திய கடன் உதவியுடன் யாழ்ப்பாணம்-கொழும்பு இடையிலான சொகுசு ரயில் சேவை இலங்கையில் துவங்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நட்புறவு அடிப்படையில் இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. இதனால் இரு தரப்பு உறவிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் வசிக்கும் காங்கேசன் துறைமுகத்துக்கும் தலைநகர் கொழும்புவில் உள்ள மவுண்ட் லாவினியாவுக்கும் இடையிலான சொகுசு ரயில் சேவை இலங்கையில் துவங்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அதன் டிவிட்டரில், `கொழும்பில் உள்ள மவுண்ட் லாவினியா, யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகம் இடையிலான 386 கிமீ தூர ரயில் சேவையை இலங்கை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி துவங்கி வைத்து முதலில் பயணித்தார். அவரை இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் வினோத் கே ஜேக்கப் கொழும்பில் உள்ள கோட்டை ரயில் நிலையத்தில் வரவேற்றார்,’ என்று கூறியுள்ளது. இந்திய அரசு தொடர்ந்து செய்து வரும் உதவிகளுக்கு இலங்கை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நன்றி தெரிவித்தார். இலங்கையின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ₹2.6 லட்சம் கோடிக்கும் மேலாக இந்தியா கடன் உதவி அளித்துள்ளது.


Tags : Jaffna ,Colombo ,India , Luxury train service between Jaffna and Colombo launched: India loan assistance
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்