ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டு சிறை: மியான்மர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாங்காக்1: மியான்மர் ராணுவ நீதிமன்றத்தால் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மேலும் 4  ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்டு,ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் அதிபராக இருந்த வின் மின்ட்,   அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் அரசியல் கட்சி தலைவருமான ஆங் சான் சூகி(76)  ஆகியோர் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சியை எதிர்த்து  அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் இதுவரை ஆயிரத்து 400 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், சட்டவிரோதமாக வாக்கி டாக்கி வைத்திருந்ததாகவும், கொரோனா விதிகளை மீறியதாகவும் சூகி மீது வழக்கு பதியப்பட்டு அவருக்கு மேலும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம்  நேற்று  உத்தரவிட்டுள்ளது. சூகி மற்றும் வின் மின்ட்டுக்கு எதிராக பல ஊழல் வழக்குகள் மற்றும் தேர்தலில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  குற்றச்சாட்டுகள் நிரூபணமானால்  அவர் 100 ஆண்டு சிறையில் இருக்க வேண்டி வரும் என கூறப்படுகிறது.

Related Stories: