கேப் டவுனில் கடைசி டெஸ்ட்; தெ.ஆப்ரிக்கா-இந்தியா இன்று பலப்பரீட்சை: தொடர் வெற்றி யாருக்கு?

கேப் டவுன்: ஆளுக்கொடு டெஸ்ட் ஆட்டத்தை வென்று சமநிலையில் உள்ள நிலையில்  தென் ஆப்ரிக்கா-இந்தியா இடையிலான  கடைசி டெஸ்ட் இன்று கேப் டவுனில் தொடங்குகிறது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஆட்டங்களை கொண்ட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.    இரு அணிகளும் 1-1  வெற்றி என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடர் வெற்றி என்பதை முடிவுச் செய்யும் கடைசி டெஸ்ட் ஆட்டம் இன்று கேப் டவுனில் தொடங்குகிறது. இந்திய அணி  கேப்டன் விராத் கோஹ்லி  மீண்டும் அணிக்கு திரும்புவதால் அணிக்கு சாதகமா, இல்லையா என்பதை விட யார் வெளியே உட்காரப் போகிறார்கள் என்பதுதான் அதிக பேசும் பெருளாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு 2வது டெஸ்ட்டில்    புஜாரா, ரகானே இருவரும் அரை சதம் விளாசியுள்ளனர்.  

அதற்கேற்ப  பயிற்சியாளர் ராகுல் திராவிட்,‘ ஸ்ரேயாஸ், விகாரி இருவரும் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டி உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.  அதனால்  விகாரி மட்டும் வெளியே உட்காரலாம்.  மற்றபடி வெற்றிக்காக,  அணியில் புதிய மாற்றம் இருக்காது. டீன் எல்கர் தலைமையிலான தெ.ஆப்ரிக்கா அணியிலும் பெரிய  மாற்றத்திற்கு வாய்ப்பு குறைவுதான்.

ஆனால் கடைசி டெஸ்ட்டில் கிடைக்கப்போகும் வெற்றி ‘தொடர் வெற்றி’ யாருக்கு என்பதை  முடிவு செய்யும் என்பதால் இரண்டு தரப்பும் வெற்றிக்கு மல்லுக் கட்டும். ஏற்கனவே 2ட டெஸ்ட்  நடந்த  இடங்களை விட கேப் டவுனின் நியூ லேண்ட்ஸ் அரங்கம் வேகத்திற்கு அதிகம் கை  கொடுக்கும். சுழலுக்கும் வாய்ப்பு உள்ளது. அதை யார் சரியாக பயன்படுத்துகிறார்களோ அவர்களும் ‘தொடர்’ வெற்றி நிச்சயம்.

*சுப்பராயனுக்கு வாய்ப்பு?

தென்ஆப்ரிக்க அணியில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. செந்றான் முத்துசாமி, கேசவ் மகராஜ் ஆகியோரை தொடர்ந்து பிரநிலன் சுப்புராயனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் ஆடும் அணியில் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

*கேப் டவுனில் இந்தியா!

கேப் டவுனில் இதுவரை இந்தியா 5 டெஸ்ட் ஆட்டங்களில் களம் கண்டுள்ளது. அவற்றில்  ஒரு ஆட்டத்தில் கூட இந்தியா வென்றதில்லை.  மொத்தம் நடந்த 5 ஆட்டங்களில் 2 ஆட்டங்கள்(1993,2011) டிராவில் முடிந்துள்ளன. மீதி 3 ஆட்டங்களில்(1997, 2007, 2018)  தெ.ஆப்ரிக்கா வென்றுள்ளது.

Related Stories: