×

சென்னையில் பாஜ போராட்டத்தில் பங்கேற்ற நடிகை குஷ்புக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுத்திய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்தும், உடனடியாக பஞ்சாப் முதல்வர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை பட்டினப்பாக்கத்தில் பாஜ சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜ தேசிய பொது செயலாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,  எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, பாஜ தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜ தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மெரினா காந்தி சிலைக்கு ஊர்வலமாக செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை குஷ்புக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை குஷ்பு தனது பேஸ்புக் பதிவில், ‘‘2 அலைகளை கடந்து வந்த பின் இறுதியாக கொரோனா என்னை தொற்றிக் கொண்டது. நேற்று மாலை (நேற்று முன்தினம்) வரை நெகட்டிவ்வாக இருந்தது. இன்று (நேற்று) பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதை தொடர்ந்து டாக்டர்கள் அறிவுரையின்படி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். வீட்டில் தனியாக இருப்பதை வெறுக்கிறேன். எனவே அடுத்த 5 நாட்களுக்கு என்னை மகிழ்ச்சியாக வைக்கவும். மேலும் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’’ என்றும் தெரிவித்துள்ளார். குஷ்பு கடைசியாக கடந்த 7ம் தேதி சென்னையில் பாஜ சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அதன் பிறகு அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Khushboo ,BJP ,Chennai , Actress Khushboo, who took part in the BJP struggle in Chennai, is affected by the corona
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...