அன்புமணி குற்றச்சாட்டு தமிழக வானொலி நிலையங்களை முடக்க ஒன்றிய அரசு முயற்சி

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவை வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சி தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் முடக்கி, அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையிலிருந்து, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க பிரசார்பாரதி தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளூர் பண்பாட்டு பரவலையும், பகிர்தலையும் தடுக்கும். அப்படி செய்யக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: