ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் திருக்கோயிலில் திவ்ய பிரபந்த பாடசாலையில் நான்கு ஆண்டுகள் சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்தக்கது

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலில் திவ்ய பிரபந்த பாடசாலையில் நான்கு ஆண்டுகள் சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள். அந்த தொடர்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலில் திவ்ய பிரபந்த பாடசாலையில் நான்கு ஆண்டுகள் சான்றிதழ் படிப்பு  தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய பணியிடங்களில் நியமனம் பெற உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தலைமை ஆசிரியராக நியமனம் பெற நாலாயிர திவ்ய பிரபந்தமும் அதன் வியாக்கியானங்களும் கற்று உபவேதாந்த வித்வான் என்ற தகுதியுடனும், சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் உடையவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 35 வயதிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.   தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 15,000/- வழங்கப்படும், உதவி ஆசிரியராக நியமனம் பெற நாலாயிர திவ்ய பிரபந்தம் கற்று அறிந்தவராகவும், கற்பித்தல் திறன் உடையவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 35 வயதிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.  தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 10,000/- வழங்கப்படும்.

மாணவர்கள் சேர்க்கைக்கு ஜாதிபாகுபாடின்றி அனைத்து சாதியினரும் பயிற்சியில் சேர தகுதி பெற்றவர்கள். பாடசாலையில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் 8 வயதிற்கு மேற்பட்டவராகவும், அதிகபட்சம் 35 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். வைணவ சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும். பாடசாலையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.3000/- வழங்கப்படும்.  திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தின்படி உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.01.2022, செயல் அலுவலர், அருள்மிகு நாச்சியார்(ஆண்டாள்) திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பணியிட விபரங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: