பிரபல தமிழ் நடிகை சோபனாவுக்கு ஒமிக்ரான்

திருவனந்தபுரம்: பிரபல தமிழ் நடிகை சோபனாவுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக, பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரபல நடிகை சோபனா. நடன கலைஞரும் ஆவார். இவர் தன்னுடைய பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: எனக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது. எவ்வளவோ கவனமாக இருந்தும் வைரஸ் என்னை பாதித்துவிட்டது. எனக்கு உடல் வலி, தொண்டை வலி, உடல் நடுக்கம் இருந்தது. நோய் பாதித்த முதல் நாள் மட்டுமே இந்த அறிகுறிகள் இருந்தது. அதன்பின்னர் குறைந்து விட்டது.

2 டோஸ் தடுப்பூசி ஏற்கனவே போட்டிருந்தேன். அதனால் தான் என்னுடைய உடலில் பெரிய பிரச்னைகள் ஏற்படவில்ைல. எனவே அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும். இந்த கொள்ளை நோயின் கடைசி உருமாற்றமாக ஒமிக்ரான் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: