×

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 4 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சித்தூர் : காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 4 மணிநேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு மாநிலம் மட்டுமின்றி தெலங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கைகளான பணம் மற்றும் நகைகளை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். மேலும், சிலர் நன்கொடையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையான நேற்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 4 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, குங்கும், சந்தனம், இளநீர், விபூதி, பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பின்னர், பக்தர்கள் காலை 5.30 மணியளவில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் 4 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து தரிசனம் செய்தனர்.

Tags : Varasiti Ganesha Temple , Chittoor: Devotees waited in a long queue for 4 hours at the Varasiti Ganesha Temple to see the Swami. Andhra Pradesh,
× RELATED காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்...