தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ரசாயனம் தடவி விற்கப்பட்ட 200 கிலோ மீன்கள் பறிமுதல்

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ரசாயனம் தடவி விற்கப்பட்ட 200 கிலோ மீன்களை அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பெரியகுளம் பகுதியில் மீன்கள் விற்கப்படும் இடங்களில் மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து மீன் கடைகளிலும் விற்கப்படும் மீன்களில் உடலை பதப்படுத்த பயன்படுத்தப் ஃபார்மலின் என்ற ரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சுமார் 200 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த மீன்களை மதுரையில் மொத்த வியாபாரிகளிடமிருந்து வாங்கி வருவதாகவும், இதில் ரசாயனம் கலந்திருக்கிறதா? என்பதை தங்களால் கண்டறிய முடியவில்லை என்றும் பெரியகுளம் மீன் வியாபாரிகள் கூறுகின்றனர். ஆகவே மதுரை மொத்த வியாபாரிகள் மீது மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியகுளம் பகுதி மீன் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.       

Related Stories: