×

மெயின் ரோட்டில் ஆறாக ஓடும் கழிவுநீர்-ராசிங்காபுரத்தில் சுகாதாரக்கேடு

போடி : போடி அருகே தேவாரம் மெயின்ரோட்டில் ராசிங்காபுரம் உள்ளது. இங்குள்ள வங்கி எதிர் சாலை கிழக்கில்  உள்ள குறுகிய சாக்கடை 200 மீட்டருக்கு மேல் சிதிலடைந்து கட்டுமானங்கள் பெயர்ந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி ரோட்டில் குளம் போல் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வாறுகால் கட்டி சுகாதாரக்கேட்டை தடுக்க வேண்டும் என்று கிராம ஊராட்சியில் புகாரளித்தனர்.

இதையடுத்து குறுகிய சாக்கடை வாறுகால் இடித்து அகற்றப்பட்டு அகன்ற வாறுகால் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதனால் மெயின் ரோட்டின் மேற்கு பகுதி சாலை மற்றும் தெருக்களிலிருந்து ஓடும் சாக்கடை கழிவுநீரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வருகின்ற கழிவுநீர் தேங்க இடமில்லாமல் வெளியேறி மெயின்ரோட்டில்  ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. வாகனங்கள் இவ்விடத்தை கடக்கும் போது கழிவுநீர் பொதுமக்கள் மீது தெளிப்பதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. எனவே வாறுகால் கட்டி முடிப்பதற்குள் கழிவுநீர் ரோட்டிற்கு வராமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வாறுகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rasingapuram , Bodi: Rasingapuram is located on Thevaram Main Road near Bodi. The narrow sewer on the east side of the bank opposite the road is over 200 meters
× RELATED கடையை காலி செய்ய சொன்னவர் மீது தாக்குதல்