கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோத்தகிரி பேரூராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு

கோத்தகிரி, : கோத்தகிரி பேரூராட்சி மூலம் பொதுமுடக்கத்தின் போது கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.தமிழக அரசு மூலம் பெருந்தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று அனைத்து வணிக நிறுவனங்கள், பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராஹிம் ஷா ஆகியோரது அறிவுறுத்தல் படி கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் கோத்தகிரி தினசரி சந்தை, காமராஜர் சதுக்கம், பேருந்து நிலையம், டானிங்டன் முதலான கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் மூலம் வாகனத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.மேலும், வாகன ஒலிப்பெருக்கி மூலம் சமூக இடைவெளி, உடல் வெப்பநிலை, கிருமிநாசினி போன்ற நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், நோய்தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: