நாடுகாணி மரபியல் பூங்காவில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு

பந்தலூர் : பந்தலூர் அருகே நாடுகாணி மரபியல் பூங்காவில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நிறைவுபெற்றது. பந்தலூர் அருகே உள்ள நாடுகாணி மரபியல் பூங்காகடந்த 1989ம் ஆண்டு 242 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டு சுமார் 1500 வகையான அரிய தாவரங்கள் இயற்கையான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுமார் 30 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது அனைத்து மரங்களும் காடு போல் வளர்ந்துள்ளது. இங்கு பல வகையான அரியவகை உயிரினங்கள் அவ்வப்போது தென்படுகிறது. தனி கவனம் செலுத்தப்பட்டு ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

இந்தாண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி முதுமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் மாவட்ட வன அலுவலர் கொம்மூ ஓம்காரம் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.  டபில்யூ டபில்யூ எப் பூமிநாதன், ரவிக்குமார், பால் பீட்டர், விஜயகுமார், கணேஷ், செல்வகணேஷ், அருள்வேலன்,  கார்த்திகேயன், அபிலாஷ், கிஷோர், மற்றும் நாடுகாணி வனச்சரகம் வனவர் பிரசாத்த தலைமையில்  18 பேர்கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர்.

குழுவாக பிரிந்து மரபியல் பூங்காவில் உள்ள அனைத்து இடங்களிலும் வாழும் பறவைகள் மற்றும் அவைகளின் குரல் குறித்து பதிவு  செய்யப்பட்டது. மேலும் இரவு நேரங்களில் மட்டும் காணப்படும் ஆந்தை போன்ற பறவைகளும் கணக்கு எடுக்கப்பட்டது.

Related Stories: