கானாட்டாங்குடி கண்மாய் உடைப்பு-சீரமைத்த கிராம மக்கள்

தொண்டி : தொண்டி அருகே கானாட்டாங்குடி கண்மாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி அருகே கானாட்டாங்குடி பெரிய கண்மாய் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது. கடந்த சில வருடங்களாக தூர் வாரப்படாததாலும் மடைகள், கால்வாய்கள் சீர் செய்யப்படாததாலும் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் கண்மாய் நிறைந்து தண்ணீர் வெளியேறியது.

குறிப்பிட்ட காலத்தில் இந்த கண்மாய் தூர்வாரப்பட்டிருந்தால் தண்ணீரை சேமித்திருக்கலாம். கடந்த 10 வருடங்களாக இந்த கண்மாய் தூர்வாரப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கண்மாயின் சருக்கை பகுதியில் உடை ப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியுள்ளது. இதையறிந்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அடைத்துள்ளனர். கண்மாய் பராமறிப்பு குறித்து பலமுறை பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை என புகார் தெர்வித்துள்ளனர்.

இதுகுறித்து ரஜினி கூறியது, கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கண்மாய் தூர் வாரப்பட்டது. அதன் பின்பு கண்மாய் பராமறிப்பு பணி எதுவும் நடைபெற வில்லை. மடைகள், சருக்கை சேதமடைந்து விட்டது. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. நேற்று சருக்கையின் கீழ் பகுதியில் உடைப்பு ஏற்ப்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தற்போது அடைத்துள்ளோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயை தூர் வாரி சரி செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: