×

சென்னையில் நேற்று முழு ஊரடங்கில் விதிகளை மீறியதாக 1040 வழக்குகள் பதிவு: ரூ.6.34 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நேற்று (09.01.2022) முழு ஊரடங்கின் போது, முகக்கவசம் அணியாத 3,174 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.6,34,800 அபராதம் வசூலிக்கப்பட்டு, கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 1040 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறிச் சென்ற 1205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகரில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, சென்னை பெருநகர காவல்துறை சிறப்பு குழுக்கள் (Special Mask Enforcement Team) மற்றும் காவல் குழுவினர் நேற்று (09.01.2022) முழு ஊரடங்கின் போது, சென்னை பெருநகரில் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் துறையினர், 312 வாகனத் தணிக்கை சாவடிகள் மற்றும் ரோந்து பணிகள் மேற்கொண்டு, முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மீது 3,174 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.6,34,800 வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று (09.01.2022) கொரோனா முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 1040 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறிச் சென்றது தொடர்பாக, 1112 இருசக்கர வாகனங்கள், 49 ஆட்டோக்கள், 40 இலகு ரக வாகனங்கள் மற்றும் 4 இதர வாகனம் என மொத்தம் 1205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 29 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள், 5 இலகு ரக வாகனம் மற்றும் 1 இதர வாகனம் என மொத்தம் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு குறித்த ஆலோசனைகள் பெற சென்னை பெருநகர காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 9498181239, 9498181236, 7200706492 மற்றும் 7200701843 எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும் 112 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் SOS செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னை பெருநகர காவல் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை மேற்கொள்வதால், மிகவும் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்கும்படியும், சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : Chennai , omicron
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...