அரசு இயந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்தாமல் இருந்தால் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோற்றுவிடும்: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சனம்

லக்னோ: அரசு இயந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்தாமல் வாக்கு இயந்திரத்தில் எந்த தில்லுமுல்லு     செய்யாமல் தேர்தலை சந்தித்தால் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என்று பகுஜன் சமாஜ் தலைவர் செல்வி மாயாவதி விமர்சனம் செய்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7 ஆம் வரை நடைபெறும் என்றும், மார்ச் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தல் முடிவும் அடிப்படையிலேயே 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தல் முடிவும் இருக்கும் என கூறப்படுவதால் உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் செல்வி மாயாவதி வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யாமல் இருந்தால் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என விமர்ச்சித்தார். தேர்தல் ஆணையத்தின் மீதான அச்சம் அரசு இயந்திரத்திற்கு இருக்க வேண்டும் என்றும், சுதந்திரமான முறையில் நியாயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.    

Related Stories: