×

விராலிமலை ஆட்டுச்சந்தையில் குவிந்த பல்வேறு பகுதி வியாபாரிகள்; முகக்கவசம் அணியாமல் திரண்டதால் நோய்த்தொற்று பரவும் அச்சம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆட்டுச்சந்தையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் ஏராளமானோர் கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் விராலிமலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தைக்கு எந்த தடையும் இல்லை. வழக்கம் போல கரூர், குளித்தலை, திருச்சி, குளத்தூர், தேனி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் என ஏராளமானோர் ஆட்டுச்சந்தையில் குவிந்தனர். அதிகாலை முதல் ஆடுகள் விற்பனை களைகட்டிய நிலையில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டனர்.

கடலூர்: கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இந்த பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை  நடைபெறும் வாரச்சந்தையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் கருவாடு போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்வதால் விலை மலிவாக கிடைக்கும் என்பதால் கடலூர், நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டதால் தொற்று பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் நோய் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.             


Tags : Viralimalai, sheep market, traders, mask, infection, fear
× RELATED வானகரத்தில் பழைய இரும்பு மற்றும்...