×

ஒமைக்ரானைத் தொடர்ந்து சைப்ரஸ் நாட்டில் 'டெல்டாக்ரான்'வைரஸ் பாதிப்பு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

நிக்கோஸியா: டெல்டா மற்றும் ஒமிக்ரான் கொரோனா வைரஸின் இணைந்த உருமாற்றத்தை சைப்ரஸ் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸில் டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான் என பல்வேறு உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆப்ரிக்காவின் தென் பகுதியில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.

ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில் சைப்ரஸ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் 25 பேருக்கு மட்டும் பாதிப்பு தீவிரமாக இருந்ததை அடுத்து அவர்களின் மாதிரிகளை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். இதில் வைரஸின் மரபணுவில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸின் பண்புகள் இணைந்து காணப்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது புதிய உருமாற்றமாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் சைப்ரஸ் நாட்டு விஞ்ஞானிகள் டெல்டாக்ரான் என பெயரிட்டுள்ளனர்.        


Tags : Cyprus , Omigron, Cyprus Country, New Transformation, Deltacron, Scientists
× RELATED தும்மனட்டி பண்ணையில் குப்ரஸ் நாற்று உற்பத்தியில் ஊழியர்கள் தீவிரம்