ஒரே நாளில் அமெரிக்காவில் 3.08 லட்சம், பிரான்ஸில் 2.96 லட்சம்... உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30.77 கோடியாக உயர்வு!!

ஜெனீவா :  உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30.77 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 கோடியே 77 லட்சத்து 88 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 27 லட்சத்து 81 ஆயிரத்து 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 95 லட்சத்து 719 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 5 ஆயிரத்து 739 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா - 3.08 லட்சம், பிரான்ஸ் - 2.96 லட்சம், இந்தியா - 1.80லட்சம், இத்தாலி - 1.55 லட்சம், பிரிட்டன் - 1.41 லட்சம் பேர் என பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

இதனிடையே கொரோனா முதலில் உருவான சீனாவில் மீண்டும் பரவல் ஆரம்பித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 103,776 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: