×

ஊரடங்கு விவரங்களை அறிய உதவி எண்கள் வெளியீடு: காவல் துறை அறிவிப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கு தொடர்பான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் பெற சென்னை மாநகர காவல் துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கும்,  ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்து அமலில் உள்ளது.

பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு குறித்து தகவல்கள் பெறவும், சந்தேகங்களை கேட்கவும், சென்னை பெருநகர காவல்துறையின் கொரோனா கட்டுப்பாட்டறை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 94981 81236, 9498181239, 72007 06492 மற்றும் 72007 01843 ஆகிய எண்களில் பொதுமக்கள் வாரத்தில் 7 நாட்களிலும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும் 112 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். காவலன் SOS செயலியையும் பயன்படுத்தலாம், என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Police Department , Release of helpline numbers to know the details of the curfew: Police Department Notice
× RELATED தோகைமலை அருகே பதுக்கி வைத்து மது விற்ற முதியவர் கைது