×

ஊரடங்கில் இப்படியும் ஒரு கூத்து... மாஸ்க் அணியாமல் வந்தவர்களிடம் போலீஸ் எனக்கூறி அபராதம் வசூல்: வாலிபர்கள் 2 பேர் அதிரடி கைது

சேலம்: தமிழகம் முழுவதும் நேற்று கொரோனா பரவல் தடுப்புக்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரை-தம்மம்பட்டி சாலையில் மேல்கணவாய் பகுதியில் நேற்று காலை 8 மணிக்கு 2 வாலிபர்கள், வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். ஒருவர், காக்கி பேண்ட், வெள்ளை சட்டையும், மற்றொருவர் கலர் ஆடையிலும் இருந்தனர். அவர்கள், அவ்வழியே வந்த பொதுமக்களை நிறுத்தி, தாங்கள் போலீசார் எனக்கூறி மாஸ்க் அணியாமல் வந்தவர்களை மிரட்டி ரூ.200 வீதம் அபராதம் விதித்து, வசூலித்தனர். பலர் அபராதம் கட்டிவிட்டு சென்றனர். அந்த இருவர் மீதும் சந்தேகம் கொண்ட பொதுமக்கள், தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக போலீசார் வரவே, வசூலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 2 பேரும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், தம்மம்பட்டி உளிபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (32), சதீஷ் (33) எனத்தெரியவந்தது. இவர்கள் இருவரும், முழு ஊரடங்கை பயன்படுத்தி போலீசார் எனக்கூறி மாஸ்க் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலித்தது உறுதியானது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : 2 youths arrested for not wearing masks: Police arrest 2 teenagers
× RELATED சிங்கப்பூரில் இருந்து வந்த விமான...