கல்லூரி மாணவன் மர்மச்சாவு: தண்டவாளத்தில் சடலம் மீட்பு

ஆவடி: அண்ணனூர், அன்னை சத்யா நகர், இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கார் டிரைவர். இவரது மனைவி முத்துகிருஷ்ணவேணி. இவர், வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (20). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சந்தோஷ், தந்தை ராதாகிருஷ்ணனிடம் பணம் வாங்கி கொண்டு,  சினிமா பார்த்து வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்னர், இவர் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை இதற்கிடையில், நேற்று காலை கொரட்டூர் ரயில் நிலையம் அருகே சந்தோஷ் தண்டவாளம் அருகில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்து பெரம்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதன் பிறகு, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்பேரில் எஸ்.ஐ ராமுத்தாய் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அடித்து கொலை செய்யப்பட்டரா அல்லது ஓடும் ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: