×

டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8ம் தேதி நிலவரப்படி 10,978 ஆக உயர்ந்துள்ளது. மூன்றே நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. 8ம் தேதி நிலவரப்படி மொத்த பரிசோதனையில் 8 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் பார்த்தால், தற்போதுள்ள எட்டு சதவீத பாதிப்பு என்பது ஒரு வாரத்தில் இரட்டிப்பாகும் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.

பிப்ரவரி மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். எனவே, கொரோனா உச்சம் செல்வதை தவிர்க்க தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும். எனவே, கொரோனா மூன்றாவது அலையை ஓரளவுக்காவது தடுக்கும் வகையில் கொரோனா பரவலின் தாக்கம் 5 விழுக்காட்டிற்கும் கீழ் செல்லும் வரையிலாவது தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


Tags : Tasmac ,OPS , Tasmac stores to close immediately: OPS request
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை