×

வேட்புமனுவில் தவறான சொத்து விவரங்களை தாக்கல் செய்த விவகாரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு

தேனி: நீதிமன்ற உத்தரவுப்படி ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். வேட்புமனுவில் சொத்து விவரங்களை தவறான தகவல் தந்த புகாரில் வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிலானி என்பவரது வழக்கில் தேனி சிறப்பு நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய 7-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி ஓ. பன்னீர் செல்வம்- அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் அளித்ததாக புகாா் எழுந்தது. தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் மற்றும் போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், வேட்பு மனுவில் தங்களது சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை அளித்துள்ளனர்.

அந்த வழக்கின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் மீது குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்ய கடந்த 7ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து மனுதாரருக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் ஆகிய இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இபிகோ 156 (3) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : High Coordinator ,OBS ,Ravindranath ,Honey District , In the nomination, false property details, OBS, son, lawsuit
× RELATED மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி...