முதுநிலை மருத்துவ கலந்தாய்வு ஜனவரி 12-ம் தேதி தொடக்கம்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அறிவிப்பு

டெல்லி: முதுநிலை மருத்துவ கலந்தாய்வு ஜனவரி 12-ம் தேதி தொடங்கும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அறிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கால் பல மாதங்களாக கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டு தீர்ப்பு வெளியான நிலையில் தற்போது முதுநிலை படிப்பிற்க்கான கலந்தாய்வு ஜனவரி 12ம் தேதி தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அறிவித்துள்ளார். கலந்தாய்வு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளியன்று அனுமதி அளித்ததை அடுத்து முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Related Stories: