×

சென்னைக்கு அடுத்து கோவைக்கு அதிக தடுப்பூசி: முதல்வருக்கு பாஜக மகளிர் அணி தலைவி நன்றி

சென்னை: பாஜ மகளிர் அணி தேசிய தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நேற்று சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தமிழக அரசு சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகமான தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. இதனால் கோவையில் இன்று பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்தளவு கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் எனது மனப்பூர்வமான நன்றி. செங்கல்பட்டு தடுப்பூசி தொழிற்சாலை சம்பந்தமாக டெல்லி சென்று, எங்களுடைய தேசிய தலைவர்களிடம் வலியுறுத்துவேன். அதோடு தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைக்க முயற்சிப்பேன். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்….

The post சென்னைக்கு அடுத்து கோவைக்கு அதிக தடுப்பூசி: முதல்வருக்கு பாஜக மகளிர் அணி தலைவி நன்றி appeared first on Dinakaran.

Tags : Goa ,Chennai ,Bajaka Women's Team Leadi ,Baja Women's Team ,National ,MLA ,Vathi Sainivasan ,Chennai Airport ,Rajaka Women's Team ,Dinakaran ,
× RELATED கோவையில் தனியார் மருத்துவமனைக்குள்...