தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜனவரி 11, 12-ல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி செல்சியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: