பாகிஸ்தானில் வீசிய பனிப்புயலில் சிக்கி 22 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் வீசிய பனிப்புயலில் சிக்கி 22 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் பனிப்பொழிவிற்கு புகழ்பெற்றது. அங்கு ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாவிற்கு சென்றிருந்த நிலையில் திடீரென பனிப்புயல் தாக்கியதால் சாலையில் பனிக்கட்டிகள் குவிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் ஏராளமான கார்கள், வேன்கள் ஆகியவை பனிப்புயலில் சிக்கின. தகவலறிந்து மீட்பு படையினர் வருவதற்குள் சுற்றுலா பயணிகள் 22 பேர் உயிரிழந்தனர். வரலாறு காணாத அளவிற்கு பெய்த பனிபொழிவே இதற்கு காரணம் என கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பனிமலையில் அங்கங்கே சிக்கியுள்ள வாகனங்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: