×

கொடநாடு கொலை வழக்கு கோவையில் 5 பேரிடம் தீவிர விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் நேற்று 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த காவலாளி கொலை, ஆவணங்கள் கொள்ளை வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுபடி இந்த வழக்கில் போலீசார் மறு விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 150க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில் 4வது குற்றவாளியான திபுவிடம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்த 6ம் தேதி விசாரணை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று திபு, சம்சீர் அலி, சதீசன், பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகிய 5 பேரிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துச்சாமி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சம்பவத்திற்கு பிறகு இவர்களை தொடர்பு கொண்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், பங்களாவில் இருந்த ஆவணங்கள் எப்போது யார் வசம் ஒப்படைக்கப்பட்டது?, கொள்ளையின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்று அவர்களிடம் போலீசார் கேட்டனர். இந்த கேள்விகளுக்கு 5 பேரும் பல்வேறு தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் ஏற்கனவே போலீசில் அளித்த வாக்குமூலத்துடன் தற்போது அளித்த தகவல்கள் ஒத்துப்போகிறதா?, முரண் இருக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்தனர்.

Tags : Kodanadu ,Coimbatore , Kodanadu murder case: Intensive investigation into 5 persons in Coimbatore
× RELATED கோடநாடு வழக்கு: சந்தோஷ் சாமியிடம் நாளை விசாரணை