×

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக 11 கோடியில் ‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பருத்தி விவசாயிகளின் நலனுக்காக 11 கோடியில் ‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பருத்தி விவசாயிகளின் நலனுக்காக 11 கோடியில் “நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற புதிய திட்டத்தை 5 விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி நேற்று தொடங்கி வைத்தார்.  இதில், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.அவற்றில் ஒரு சிறப்பம், நீண்ட இழை பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம்.

இந்த திட்டத்தின் கீழ், நீண்ட, மிக நீண்ட இழை பருத்தி ரகங்களான எஸ்.வி.பி.ஆர்-5, எஸ்.வி.பி.ஆர்-6, கோ-14, சுரபி, சூரஜ் மற்றும் கோ-17 விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு கிலோ விதைக்கு 60 வீதமும், சான்று பெற்ற பருத்தி விதைகள் விநியோகத்தின் கீழ் கிலோவிற்கு 130 வீதம், ஹெக்டேருக்கு 1,300, பருத்தியில் ஊடுபயிர் சாகுபடி செய்திட பயிறு விதைகள் ஒரு ெஹக்டேருக்கு 500, பருத்தி நுண்ணுரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் ஒரு ஹெக்டேருக்கு 950, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான இடுபொருட்கள் ஒரு ஹெக்டேருக்கு 6,500, விசை களைக்கருவி ஒன்றிற்கு 47,000 மற்றும் தண்டு கூன் வண்டுகளை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு இடுவதற்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 5,000 வீதம் மானியத்தில் பருத்தி விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

விருப்பமுள்ள சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 97 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள்: சென்னை தலைமைச்  செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின்,  தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம்  கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரில் இயல்புநிலை தேங்காய் எண்ணெய் மற்றும்  தேங்காய்  பவுடர் தயாரிக்கும் கூடம், தலா 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள்  மற்றும் தொழிலாளர் ஓய்வு அறை முதலான கட்டுமானங்களை உள்ளடக்கி  16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தென்னை மதிப்புகூட்டு மையம்,  தர்மபுரி மாவட்டம் - பாப்பாரப்பட்டி,  திண்டுக்கல் மாவட்டம் -  வேடச்சந்தூர் மற்றும் கவுஞ்சி, தேனி மாவட்டம் - கெங்குவார்பட்டி  ஆகிய இடங்களில் 39.43  கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெ.டன் குளிர்பதன கிடங்கு, தரம்பிரிப்பு மற்றும்  சிப்பம் கட்டும் கூடம்,  தர நிர்ணயம்  மற்றும்   தரக்கட்டுப்பாட்டு அறை,   1000 மெ.டன்   மற்றும்   500 மெ.டன் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இயந்திரங்களுடன் கூடிய முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 20.20 கோடி மதிப்பீட்டில் 2.50 லட்சம்  மலர் தண்டுகளுக்கான குளிர்பதன கிடங்கு,  ஏல மையம், தரம் பிரிப்பு கூடம், வணிகர் கூடம்,  கடைகள், கூட்ட அரங்கம், பயிற்சி அரங்கம், விநியோகக்கூடம், 2000 மெ.டன் சேமிப்பு கிடங்கு முதலான கட்டுமான பணிகளை மலர் வளர்க்கும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காகவும்  ஏற்றுமதியை  ஊக்கப்படுத்தும் வகையிலும் மலர்களுக்கான பன்னாட்டு ஏல மையத்தை திறந்துவைத்தார். டெல்டா மாவட்டமான திருவாரூர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் 3.6.2021  அன்று வெளியிட்ட அறிவிப்புகளில் ஒரு பகுதியான, திருத்துறைப்பூண்டி, பூந்தோட்டம் மன்னார்குடி மற்றும் திருவாரூர் பல்வேறு திட்டபணிகளை மொத்தம் 97 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை நேற்று திறந்து வைத்தார்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்காகவும், வணிக விரிவாக்கம் உற்பத்தி  முதலீட்டிற்காகவும்  மற்றும்  விதை  சுத்திகரிப்பு நிலையம்   அமைப்பதற்கும் 12.68 கோடி  மதிப்பீட்டில் 110 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு  தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மற்றும் தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிதி வழங்கிடும் விதமாக முதல்வர் 5 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.

பதிவுபெற்ற விவசாயிகளுக்கு 150 கோடி சிறப்பு ஊக்கத்தொகை
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், 78 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு வழங்கிய தகுதியுடைய 91 ஆயிரத்து 120 விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக, மொத்தம் 150 கோடியே 89 லட்சம் வழங்கும் பணியை 5 கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு, சர்க்கரை துறை ஆணையர் ஹர்மந்தர் சிங், உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தனி நிதிநிலை அறிக்கை 2021-22 அறிவிப்பின்படி, கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு 42.50, சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு 150 என மொத்தம் 192.50, தமிழ்நாடு அரசால், ஒன்றிய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலையான 2,707.50ஐ விட டன் ஒன்றிற்கு கூடுதலாக வழங்கப்படுகிறது.

இதன்படி 2020-21ம் அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய பதிவு பெற்ற விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு 2,900 கிடைக்க பெறுகிறது.அதன்படி, தமிழ்நாடு அரசால், 2020-21 அரவை பருவத்தில் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், 15 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் 17 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 78 லட்சத்து 38 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு வழங்கிய தகுதியுடைய 91 ஆயிரத்து 120 விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக, மொத்தம் 150 கோடியே 89 லட்சம் வழங்கப்பட்டது.

Tags : Cotton Movement ,Chief Minister ,MK Stalin , For the benefit of cotton farmers 11 crore ‘Sustainable Cotton Movement’: Launched by Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...