×

27 சதவீத இடஒதுக்கீடு நீண்டநாள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவப் பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.  

1990ம் ஆண்டு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு அளவினை 27 சதவீதம் என நிர்ணயித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டபோது, சமுதாய நிலையிலும், கல்வி துறையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கு உதவுகின்ற வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும், 27 சதவீத இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக 50 சதவீதம் என்பதை மத்திய அரசு கொள்கையாக ஏற்று அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 30.09.1991 அன்று தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. இப்போதைய தீர்ப்பு, அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

Tags : OBS ,EPS , 27 percent reservation For a long struggle Success: OBS, EPS joint announcement
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி