இறுதி போட்டியில் இந்திய இணை

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் விளையாட இந்தியாவின் ரோகன் போபண்ணா - ராம்குமார் ராமநாதன்  இணை தகுதி பெற்றது.அரையிறுதியில்  போஸ்னியா & ஹெர்சகோவினாவின் டாமிஸ்லாவ் - சான்டியாகோ கோன்சாலஸ் (மெக்சிகோ) ஜோடியுடன் மோதிய இந்திய இணை  6-2, 6-4 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தியது. இன்று நடக்கும் பைனலில் குரோஷியாவின் இவான் டோடிக் - மார்செலோ மெலோ (மெக்சிகோ) இணையுடன் போபண்ணா - ராம்குமார் ஜோடி மோதுகிறது.

Related Stories: