×

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலையடுத்து தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்

* வெளியே சுற்றினால் வழக்கு பாயும் * போலீஸ் கடும் எச்சரிக்கை * ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்பு

சென்னை:  கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்கு பாயும் என போலீசார் எச்சரித்தனர். மேலும், பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் மற்றும் ரோந்து வாகனங்களை அதிகமாக ஈடுபடுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு முழுவதும் அனைத்து சாலைகளும் வெறியேடிச்சோடியது. அதையும் மீறி சாலைகளில்  சுற்றிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். தமிழகத்தில்  அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும்  வகையில் தமிழக அரசு கடந்த 6ம் தேதி இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 5 வரை  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு  நேர ஊரடங்கு என்பதால் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசார் அந்தெந்த மாவட்ட  எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து விடிய விடிய தீவிரமாக  கண்காணித்தனர். மேலும் அரசு அனுமதி அளித்த மாநிலத்திற்குள் பொது மற்றும்  தனியார் பேருந்துகள் போக்குவரத்து, அத்தியாவசிய பணிகளான பத்திரிகை, பால் விநியோகம், மருத்துவ பரிசோதனை கூடங்கள், ஆம்புலன்ஸ் சேவை,  சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் மட்டும் ஊரடங்கின் போது  அனுமதிக்கப்பட்டது. உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை  நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நிறுவனம் வழங்கிய அடையாள அட்ைட  வைத்திருந்தவர்களை மட்டும் போலீசார் அனுமதி அளித்தனர். மற்றவர்களை திருப்பி  அனுப்பினர்.அதைப்போன்று தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மூடப்பட்டது. அதையும் மீறி திறந்து இருந்த உணவகங்களை போலீசார் கடுமையாக எச்சரித்து  மூடினர். ஆனால், சமூக இடைவெளி கடைப்பிடித்து பார்சல்கள் வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டது.

சென்னை, ஆவடி, தாம்பரம் ஆணையரகம் சார்பில் 500க்கும் மேற்பட்ட ேசாதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. இந்த பணிகளில் 13 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர்.அதன்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்  உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் தலைமையில் துணை  கமிஷனர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்தனர். இரவு  10 மணிக்கு மேல் சாலையில் சுற்றிய மற்றும் நடந்து ெசன்ற பொதுமக்களை அந்தந்த  காவல் நிலைய போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்து வழக்குபதிவு செய்து அபராதம் விதித்தனர். நடந்து சென்ற பொதுமக்களையும் போலீசார் வீட்டிற்கு செல்லும் படி  கூறி அனுப்பினர். அதேபோல் அனைத்து கடைகளும் 10 மணிக்கு மேல் முடும் படி  போலீசார் அறிவுறுத்தினர். வாகனங்கள் செல்லாத இடங்களில் மக்கள், இளைஞர்கள் கூடுவதை தடுக்க டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது.

போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் இரவு முழுவதும் அண்ணாசாலை, வடபழனி 100  அடி சாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை,  திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல்  நெடுஞ்சாலைகள் என அனைத்து சாலைகளும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடியது.  இதே நிலைமைதான் மாநிலம் முழுவதும் காணப்பட்டது. விதிகளை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு  திங்கட்கிழமை காலை 5 மணி வரை வெளியில் வரக்கூடாது என்று எச்சரித்தனர். அதையும் மீறி வெளியில் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


Tags : Tamil Nadu , Corona and Omigran diffusion Full curfew imposed in Tamil Nadu today
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...