8வது மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை

திருப்போரூர்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (34). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி சுஷ்மா (30). தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கி, வசித்தனர். பிரவீன்குமார் வேலை செய்த நிறுவனத்தில் பலரும் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பீரவீன்குமார் அந்த பட்டியலில் இல்லை.

இதனால் அவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வேலையை ராஜினாமா செய்தார். பின்னர், ஒரு சிறிய நிறுவனத்தில், குறைந்த ஊதியத்தில் வீட்டில் இருந்தபடி வேலை செய்தார். போதிய வருமானம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்த அவர், மீண்டும் கொரோனா தொற்று குறித்த தகவல்கள் வெளியானதால் சுஷ்மிதாவை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பினர். தனிமையில் இருந்த பிரவீன்குமார், அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து, நேற்று மதியம் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: