வெங்காடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், சிட்லப்பாக்கம் கோட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கொளத்தூர் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமை வகித்தார். துணை தலைவர் தமிழ்செல்வி ரவிசந்திரன் வரவேற்றார். ஊராட்சி செயலர் தணிகாசலம் முன்னிலை வகித்தார்.

கொளத்தூர் கால்நடை மருந்தகம் உதவி மருத்துவர் பிரேம்ஷீலா, ஆய்வாளர் சுதா, பராமரிப்பு உதவியாளர் தாமோதிரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆடு, மாடு, கோழி, நாய் உள்பட 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பூச்சி மருந்து, சினை பரிசோதனை, தாது உப்பு கலவை ஆகியவை வழங்கினர். மேலும், சிறந்த கன்று மற்றும் கறவை மாடுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் கொளத்தூர், வெங்காடு, இரும்பேடு, கருணாகரச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான கால்நடைகளை, வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories: