நாதஸ்வரம், தவில் கலைஞர்கள் சங்க ஆண்டு விழா

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர, தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்க ஆண்டு விழா காஞ்சிபுரத்தில் நடந்தது. சங்க தலைவர் எம்.எஸ்.நாகராஜன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர்ஆறுமுகம், சங்க பொருளாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட செயலாளர் எம்.ராமதாஸ் வரவேற்றார்.

சங்க நிர்வாகிகளால் கலைமாமணி விருது பெற்ற நாதஸ்வர கலைஞர் சென்னை மாம்பலத்தை சேர்ந்த எம்.கே.எஸ்.சிவா, சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான அடையாறு எஸ்.பத்மநாபன், மாநில செயலாளர் டி.எஸ்.பாபு, மாநில பொருளாளர் ஆர்.கோட்டி உள்பட நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் 97 பேருக்கு பாராட்டு சான்றிதழ், விருது வழங்கப்பட்டது.சங்க மாநில சட்ட ஆலோசகர் எஸ்.கதிர்ராவ், மாவட்ட சட்ட ஆலோசகர் பி.எஸ்.மணி, மருத்துவ சமுதாய அறக்கட்டளை செயலாளர் பி.எஸ்.மணி, ஓதுவார் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: