×

ஆஷஸ் 4வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன்னில் ஆல்அவுட்

சிட்னி: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் மெல் போர்னில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸ் 66 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஜானி பேர்ஸ்டோ 106, ஜாக் லீச் 4 ரன்னில் களத்தில் இருந்தனர். 4வது நாளான இன்று பேர்ஸ்டோ 113, லீச் 10, ஸ்டுவர்ட் பிராட் 15 ரன்னில் ஆட்டம் இழந்தனர். 79.1 ஓவரில் 294 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது.

ஆஸி. பந்துவீச்சில் போலண்ட் 4, கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 122 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி. அணியில் வார்னர் 3, ஹாரீஸ் 27, லாபுசாக்னே 29 ரன்னில் மார்க்வுட் பந்திலும், ஸ்மித் 23 ரன்னில் லீச் பந்திலும் ஆட்டம் இழந்தனர். 42 ஓவரில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன் எடுத்திருந்தது. கவாஜா 28, கேமரூன் கிரின் 12 ரன்னில் களத்தில் இருந்தனர். 6 விக்கெட் கைவசம் இருக்க ஆஸி 250 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

கடைசி டெஸ்ட்டிலும் ஹேசில்வுட் விலகல்
ஆஸ்திரேலியா கிரிக்கெட்  அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பிரிஸ்பேனில் நடந்த  ஆஷஸ் முதல் டெஸ்ட்டிற்கு பின் காயம் காரணமாக அடுத்த 3 டெஸ்ட்டில் விளையாட  வில்லை. இந்நிலையில் காயத்தில் இருந்து அவர் மீளாததால்  ஹோபார்ட்டில்  நடைபெறும் கடைசி டெஸ்ட்டிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ashes ,England , Ashes 4th Test, England, innings, all out
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்