உத்தரப்பிரேதசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி : உத்தரப்பிரதேசத்தில் பிப்.10, பிப்.14, பிப்.20, பிப்.23, பிப்.27, மார்ச் 3, மார்ச் 7 என 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் என்று  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல்:

வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம் : ஜனவரி 14

மனுத்தாக்கல் கடைசி நாள் : ஜனவரி 21

மனுக்கள் மீதான பரிசீலனை : ஜனவரி 24

வாபஸ் பெற கடைசி நாள்: ஜனவரி 27

வாக்கு எண்ணிக்கை: மார்ச் 10

மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3ஆம் தேதி இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்:

வேட்பு மனுத்தாக்கல்: பிப்ரவரி 01

வேட்புமனு பரிசீலனை: பிப்ரவரி 09

வாக்குப்பதிவு: பிப்ரவரி 27, மார்ச் 3

வாக்கு எண்ணிக்கை: மார்ச் 10

பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். பஞ்சாப்பில் 117, கோவாவில் 40, உத்தராகண்ட்டில் 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்:

வேட்புமனு தாக்கல்: ஜனவரி 21

மனுதாக்கல் செய்ய கடைசி நாள்: ஜனவரி 28

மனுக்கள் மீதான பரிசீலனை: ஜனவரி 29

வாபஸ் பெற கடைசி நாள்: ஜனவரி 31

வாக்குப்பதிவு: பிப்ரவரி 14

வாக்கு எண்ணிக்கை: மார்ச் 10

Related Stories: