மண்ணச்சநல்லூர் அருகே ரூ.5 லட்சம் மதுபானம் கீழே ஊற்றி அழிப்பு-போலீசார் நடவடிகை

முசிறி : மண்ணச்சநல்லூர் அருகே தச்சன்குறிச்சி வனப்பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 4,130 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அதிலிருந்த மதுவை கீழே ஊற்றி அழித்தனர்.மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூரில் கடந்த ஜூலை 20ம் தேதி திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை கண்டறிந்த மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி அப்பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரின் தோட்டத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 4,130 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதில் லாரன்ஸ் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் மது பாட்டில்களை தச்சங்குறிச்சி வனப்பகுதியில் வைத்து மதுவிலக்கு டிஎஸ்பி முத்தரசு, திருச்சி கலால் உதவி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலையில் பாட்டில்களில் இருந்த மதுவை கீழே ஊற்றி போலீசார் அளித்தனர். காலி மது பாட்டில்கள் விரைவில் ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: