×

ஏற்காட்டில் இருந்து அடிவாரத்திற்கு பாரா கிளைடிங் சாகச பயணம்: சேலம் இன்ஜினியர் 2 முறை பறந்து அசத்தல்

சேலம்: ஏற்காடு லேடி சீட் என்ற இடத்தில் இருந்து பாராசூட்டில் ஏற்காடு மலை அடிவாரம் பறந்து வந்து சாதனை புரிந்தார் சேலம் வாலிபர். சேலம் அருகே உள்ளது கன்னங்குறிச்சி. இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் வயது (வயது 27). BE, MBA பட்டதாரியான இவர், தற்போது லடாக் பகுதியில் தனியார் பயிற்சி மையம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையத்தில் பாராசூட் பயணம் செய்வது எப்படி? கடலில் நீச்சல் அடிப்பது மற்றும் பல்வேறு பயிற்சிகள் தரப்படுகிறது. சில வருடத்திற்கு முன்பு ராஜேஷ் பாராசூட் பயிற்சி பெற்று பல முறை இமாச்சல பிரதேசத்தில் பறந்து உள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பாராட் சூட்டில் பறக்க   ராஜேஷும், அவரது நண்பர்கள் மதுரையைச் சேர்ந்த சூர்யா மற்றும் சென்னையை சேர்ந்த அபிலாஷ் முடிவு செய்தனர். இவர்களும் பாராசூட்டில் பறக்க பயிற்சி எடுத்தவர்கள். பாராசூட்டில் பறக்க உரிய சான்றிதழ்களைப் பெற்று உள்ளனர். நண்பர்கள் மூவரும் ஏழைகளின் ஊட்டி எனச் செல்லமாக அழைக்கப்படும் ஏற்காட்டில் பாராசூட் பயணம் செய்துபார்க்க முடிவு செய்தனர். சுற்றுலா பயணிகளுக்கும், விமானபடைக்கு செல்லும்  மாணவ மாணவிகளுக்கும் பாராசூட் பயிற்சி தரநண்பர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து நேற்று பிற்பகல் வாலிபர் ராஜேஷ் ஏற்காடு லேடிஸ் சென்றார். இதன் பின்னர் அங்கிருந்து பாராசூட் மூலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குருவம்பட்டி உயிரியல் பூங்கா பகுதிக்கு பறந்து வந்தார். பாராசூட் பயணம் மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் சேலம் காமலாபுரம் விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருந்தார். இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தபடி ராஜேஷ் ஏற்காடு மலை அடிவாரம் பறந்துவந்து சேர்ந்தார். மொத்தம் 27 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடத்தில் பறந்து வந்தார்.

ஏற்காடு மலை அடிவாரத்தில் ராஜேசை அவரது நண்பர்கள் சூர்யா மற்றும் அபிலாஷ் மற்றும் காவல்துறையினர், வனத்துறையினர் வரவேற்றனர். ஏற்காடு மலையில் இருந்து முதன் முதலாக பாராசூட் மூலம் பறந்து வந்த ராஜேஷ்க்கு பலரும் வாழ்த்துக் கூறினர். பாராசூட் பயணம் வெற்றி அடைந்தது குறித்து மதுரையைச் சேர்ந்த சூர்யா கூறியதாவது,

இமாச்சல பிரதேசத்தில்
பாராசூட் பறப்பது எப்படி என கற்றுக் கொண்டேன். அங்குதான் ராஜேஷ் எனக்கு நண்பரானார் இமாச்சல பிரதேசத்தில் பாராசூட் பயணத்தை சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இதுபோல் சேலத்திற்கு வர வேண்டும் என்பது எங்களது நோக்கமாக உள்ளது என்று கூறினார்.

Tags : Salem Engineer , Paragliding adventure from Yercaud to the foothills: Salem Engineer flew 2 times
× RELATED ஏற்காட்டில் இருந்து அடிவாரத்திற்கு...