×

உ.பி, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பிற்பகல் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.!

டெல்லி : 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். உத்தரகாண்ட், உ.பி, பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம்.

அதன்படி, உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடைய உள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியும், மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியும் நடக்கும் நிலையில், தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி 5 மாநிலங்களிலும் திட்டமிட்டபடி சட்டமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Election Commission ,UP ,Punjab ,Manipur , UP, Punjab, Manipur, including 5 state legislatures this afternoon, the Election Commission announces the date.!
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...